வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக பேர்ணாம்பட்டு சுரேஷ்குமார் நியமனம்.

Loading

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக பேர்ணாம்பட்டு சுரேஷ்குமார் நியமனம்.
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக, பேர்ணாம்பட்டு நகர காங்கிரஸ் தலைவர் ஜி.சுரேஷ்குமார் (45) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் பேர்ணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். பட்டதாரி.
மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், ஐஎன்டியூசி போன்ற பல்வேறு துணை அமைப்புகளில் நகர, மாவட்ட, மாநில அளவில் பொறுப்புகளை வகித்தவர்.
கட்சி அறிவித்த போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்றுவருபவர்.
பேர்ணாம்பட்டு பஸ் நிலைய மாற்றம் போன்ற மக்கள் நல பிரச்சனைகளுக்காக அனைத்து கட்சியினர், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்திவருபவர்.
சிறந்த காங்கிரஸ் தொண்டனான சுரேஷ்குமாரை மாவட்ட தலைவராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பரிந்துரையின்பேரில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்கள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் ஒப்புதலின்பேரில் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நியமித்துள்ளார்.
குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய 3 எம்எல்ஏ தொகுதிகளுக்கு உள்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகப் பணிகள் வேலூர் மத்திய மாவட்டத்தில் வருகிறது.
இதற்கு முன் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த குடியாத்தம் ஜெ.ஜோதி, குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு தலைமையில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மாநில நிர்வாகிகள் , மாவட்டத் தலைவர்கள் மாற்றத்தின்போது சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *