யார் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தான் அமோக வெற்றி பெறும் என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
யார் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தான் அமோக வெற்றி பெறும் என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில், குறு சிறு தொழில் துறையில் இந்தியாவிலே தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ள அளவிற்கு சிறப்பாக பணியாற்ற ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமினுக்கு தலித் இந்தியன் வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் சார்பில் பாபா சாகேப் அன்னல் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெஞ்சமின்…
எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கு தொழில் துறையில் பல்வேறு திட்டங்கள் அம்மாவின் ஆட்சியில் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக திறமையினால் பல்வேறு நல்லத் திட்டங்களை தமிழகத்தில் உருவாக்கியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 9 ஆண்டுகளில் 1 லட்சத்தி 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர்க்கு 2510 கோடி மானியமாக கொடுக்கப்பட்டுள்ளது
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நல்லாட்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிமுக அரசை தான் விரும்புகிறார்கள். இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகக்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது.
மேலும் ரஜினி அரசியலில் நிலைப்பாடு குறித்து யார் அரசியலுக்கு வந்தாலும், வரவில்லை என்றாலும் அதிமுக தான் அடுத்த ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தார்.