நெல்லை மாவட்டம் தருவையில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது…

Loading

நெல்லை மாவட்டம் தருவையில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ பால பாக்கிய சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று கொரோனா என்ற கோரப்பிடியில் இருந்து விடுபடவும் செல்வ செழிப்போடு ஆனந்தமாய் வாழவும் சிறப்பு வழிபாடு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது இந்த விழாவின் முக்கிய சிறப்பாக சீரடி சாய் நாதருக்கு ஆயிரம் கிலோவிற்கு மேல் பழவகைகளைக் கொண்டு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது இந்த சிறப்பு வழிபாட்டில் பொதுமக்கள் மற்றும் சாய் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பாபாவின் அனுக்கிரகத்தினையும் ஆசீர்வாதம் பெற்று சென்றனர் விழாவின் சிறப்பாக பூஜையில் கோமாதா மற்றும் பைரவர் கலந்துகொண்டது அதனை தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *