திருவள்ளூர் மாவட்டத்தில் 3 மையத்தில் Covid-19 தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை :
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி Covid-19 தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் ஒத்திகை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர் ,நீலகிரி ,மற்றும் திருநெல்வேலி ஆகிய சுகாதார மாவட்டங்களில் 17 இடங்களில் ஒத்திகை நடைபெற்று வருகிறது .
இத்தடுப்பூசி திட்டம் செயல்படுத்தும் போது ஏற்படும் சவால்களை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்வதே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும். covid-19 தடுப்பூசி வழங்க தமிழ்நாட்டில் உள்ள சுமார் 47,500 தடுப்பூசி வழங்கும் மையங்கள், சுமார் 21,600 தடுப்பூசி வழங்கும் பணியாளர்கள் பட்டியல் பட்டியலிடப்பட்டு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி 2881 அரசு மருத்துவ மனைகள் மற்றும் 35,403 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 6 லட்சம் ,மருத்துவர்கள்,செவிலியர்கள்,களப் பணியாளர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மருத்துவமனையை சார்ந்த பணியாளர்களுக்கு covid-19 தடுப்பூசி முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் காத்திருப்போர் அறை, தடுப்பூசி வழங்கும் வரை கண்காணிப்பு அறை என மூன்று பிரிவுகளாக செயல்பட உள்ளது .
மாவட்ட தடுப்பூசி அலுவலர், தடுப்பூசி வழங்கும் இடம், வழங்குபவர் மற்றும் covid-19 தடுப்பூசி கோவின்cowin இணையதளம் மூலமாக செயல்படுவதோடு தொடர் கண்காணிப்பில் ஈடுபடும் ஒரு தடுப்பூசி மையத்திலும் ஈடுபடுவார் ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் பாதுகாவலர் பயனாளிகளை சரி பார்ப்பார், தடுப்பூசி வழங்குபவர், கண்காணிப்பாளர்கள் என ஐந்து நபர் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்படும்.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லியில் தாய்சேய் நல சுகாதார மையம் ,நேமம் ப்ரைமரி ஹெல்த் சென்டர் ,திருமழிசை ப்ரைமரி ஹெல்த் சென்டர் ஆகிய இடங்களில் 25 நபர்கள் வீதம் 75 சுகாதார பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ள சுகாதார ஊழியர்கள் தனது அடையாள அட்டையை காண்பித்து உறுதி செய்தபின் இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்கிறார்களா என்று உறுதி செய்யப்பட்டதை பிறகு தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
இதில் சுகதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரபாகர், கண்காணிப்பு மருத்துவமனை அலுவலர் சுரேந்திரன், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ஈஸ்வரி, சுகாதார நிலைய மருத்துவர் சதீஷ், வட்டார மருத்துவர் பிரத்திபா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
============================================================