திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று குரூப் 1 தேர்வு நடைபெற்றது, தேர்வு எழுதும், மாணவ, மாணவிகளை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்,
பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்களில் 5466 பேர் தேர்வு எழுதுகின்றனர், அதில் 17 மாற்றுத்திறனாளிகள். மொத்தம் 7 இடங்கள் 5 கல்லூரிகள், 2 அரசு பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருகிறது கொரோனோ காரணமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது, மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு , சானிடைசர், கையுறை, முகக் கவசம், கழிவறை, குடிநீர் வசதி, உட்படதேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இதற்கு முன்னதாகவே என் தலைமையில் குரூப்- 1 தேர்வு நடத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது, அந்த ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பான முறையில் குரூப்-1 தேர்வு நடத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.