தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் திமுக கிராமசபை கூட்டம்…
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் திமுக கிராமசபை கூட்டம் .
பாலக்கோடு் பேரூராட்சியில் உள்ள 9வது வார்டு சாவடித் தெருவில் பாலக்கோடு நகர பேரூர் கழக திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையொட்டி பாலக்கோடு நகர பேரூர் கழக செயலாளர் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பி கே. முரளி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்று. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் அப்பகுதியில் உள்ள குறைகளே எடுத்துக் கூறினார்கள். பெண்களுக்கு சுயதொழில் கிராமப் பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு இருப்பது போல டவுனில் வசிக்கும் பெண்களுக்கும் இதேபல் வேலை வாய்ப்புவேண்டும். படித்து வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தொழில் அமைத்து தர வேண்டும். என்று பெண்களின் கூட்டத்தில் அவரவர் கோரிக்கைகளை தெரிவித்தனர். தங்களது கோரிக்கையை திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று இறுதியில் அதிமுகவை அகற்றுவோம் என்ற தீர்மானத்தை கூட்டத்தில் நிறைவேற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கையொப்பமிட்டனர். முன்னிலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம், கிளை செயலாளர் சரவணன்.நகர அவைத்தலைவர் ராஜ். மற்றும் அமைப்பாளர்.ஆறுமுகம். மாரியப்பன். மன்சூர். ரவி. மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.