கடலூர் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முயற்சியால் கடலூர் மாவட்டம் காவல் குடும்பத்தாரின் பிள்ளைகள் தொழில் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் விருப்பமானவர்கள் வரவழைத்து ஆலோசனை கூட்டம்…
கடலூர் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முயற்சியால் கடலூர் மாவட்டம் காவல் குடும்பத்தாரின் பிள்ளைகள் தொழில் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் விருப்பமானவர்கள் வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் இந்தியன் வங்கி மூலம் சுய தொழில் தையல் பயிற்சி கடலூர் எஸ்.ஆர்.ஜே காவலர் திருமண மண்டபத்தில் 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 35 பெண்கள் தையல் பயிற்சி பெற்றனர். இதில் காவலர்களின் பெண் பிள்ளைகள் 17, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 18 பெண்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.
மேலும் பயிற்சியில் திறமையின் அடிப்படையிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை கணக்கில் கொண்டு 4 பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது.
இந்தத் தையல் பயிற்சியில் பெண்கள் அணியும் பலவகை ஜாக்கெட், பல மாடல் சுடிதார்கள், பள்ளி சீருடைகள், நைட்டி, கவுன் மற்றும் மீதமுள்ள துணிகளை வைத்து கால்மிதி, அலங்கார பூக்கள், பொம்மை போன்ற அலங்கார பொருட்கள் உருவாக்க பயிற்சி பெற்றனர்.மேலும் பயிற்சியில் பங்கு பெற்ற பெண்களுக்கு அவர்கள் தைக்கும் துணி மற்றும் தேவையான பொருட்களான பணத்தை ஓய்வுபெற்ற பேராசிரியர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் திரு. ரவிச்சந்திரன், இந்தியன் வங்கி முதன்மை மேலளர் (சுயதொழில் பிரிவு) திரு. அகிலன், திருமதி சிந்துஜா, பயிற்சியாளர்கள் திருமதி கெரெசின் கிரேஸ், திரு. சத்தியநாராயண பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.