தும்மிச்சம்பட்டி – சத்தியாநகர் ஸ்ரீஅபிஷேகப் பிரியன் ஐயப்பா சேவா சங்கம் 19-ம் ஆண்டு அன்னதானப் பெருவிழா.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் – தும்மிச்சம்பட்டி சத்தியாநகர் ஸ்ரீஅபிஷேகப்
பிரியன் ஐயப்பா சேவா சங்கம் – 19-ம் ஆண்டு அன்னதானப் பெருவிழா நடைபெற்றது.
19-ம் ஆண்டு மண்டல பூஜைக்கு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்
கே.திருப்பதி ரெட்டியார் தலைமை வகித்தார். காங்கேயம் எஸ்.வருன் அன்னதானத்தை துவக்கி
வைத்தார், இந்து முன்னனி மாவட்ட செயலாளர் தளபதி பி.ரகுபதி, மாவட்ட துணைத்தலைவர் என்.ராஜா
ஆகியோர் கணபதி ஹோமத்தை துவக்கிவைத்தனர். மதுரை எ.ராஜாதர்ஷணா, ஒட்டன்சத்திரம் எம்.டி.எம்.
மணிகண்டன் ஆகியோர் லட்சார்ச்சனையை துவக்கி வைத்தனர்.
மரியபைசல்-காளீஷ்வரி, ஷீமா, ரிஷில் (எ) மணிகண்டன், ஜொரால் (எ) மதுரைவீரன்,
வீரம்மாள் ஆகியோர் காலை உணவு வழங்கினர். முன்னாள் நகர் மன்ற கவுன்சிலரும்,
ஊர்நாட்டாமையுமான இரா.திருமூர்த்தி கணபதி ஹோமத்திற்கு 108 சரண கோஷங்கள் முழங்க தீப
ஆராதனை பூஜையை துவக்கி வைத்தார்.
முன்னதாக முன்னாள் கவுன்சிலரும் திமுக மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு
அமைப்பாளரும்மான கே. திருமலைசாமி 16-வது வார்டு செயலாளர் மு.ஆறுமுகம், முன்னாள்
கவுண்சிலர் எஸ். மகுடீஸ்வரன், 15-வது வார்டு செயலாளர் ஆட்டோ. டி.வடிவேல் ஆகியோர்
அன்னதானத்திற்கு முன்னிலை வகித்தனர். அருள்திரு.வி.ஹரிஹரன் பட்டாச்சாரியார் கணபதி
ஹோமத்தை நடத்தினார்
இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டி, சத்தியாநகர், காந்திநகர்,
நாகணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து
கொண்டனர். குருசாமிகள் ஜமன்னன் குருசாமி, நாகன் குருசுவரி, எம். அன்பரசன் சாமி,
செயலாளர்கள் முருகன், டி.சுப்பையா, கிட்டான்(எ) கிருஷ்ணசாமி,
பொருளாளர்கள் ஜெயபாலன், சுந்தரம், மணிமாறன், கௌரவஆலோசகர்கள், ஆலாம்பட்டி,
பி.சுப்பையா, சிந்தலப்பட்டி ராஜேந்திரன், சத்தியாநகர் உங்கள் ப.உதயன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.