கன்னியாகுமரி மாவட்டத்தில் முறையான அனுமதி இன்றி செயல்படும் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு நிர்வாக இயக்குனர் பாலியல் ரீதியாக கொடுமை

Loading

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளச்சிவிளையில் செயல்பட்டுவரும் கேப் சிட்டி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் நர்சிங் படிக்கும் மாணவிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மனுவில் 100 க்கும் மேற்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேப் சிட்டி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் விடுதியில் தங்கி நர்சிங் பயின்று வருவதாகவும்
இந்தக் கல்லூரியின் தாளாளர் அன்றோ செல்வகுமார் 46. இவரது மனைவி கல்லூரி முதல்வர் செல்வராணி 43 ஆகியோர் இக்கல்லூரிக்கு மத்திய மாநில அரசுகளின் சான்றிதழ் பெற்றுள்ளதாக ஏமாற்றி இடைத்தரகர்கள் மூலம் தங்களை சேர்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

சேர்க்கையின்போது எங்களது பள்ளி அசல் சான்றிதழை பெற்றுக் கொண்டதாகவும் இங்கு போதுமான அடிப்படை வசதி ஏதும் இல்லை. மிகச் சிறிய அறையில் 100 பேருக்கு மேல் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தேவையான உணவு தருவதில்லை எனவும் கழிவறை வசதி போதுமானதாக இல்லை எனவும் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருந்தனர்.
அதோடு, அந்த கல்லூரியில் எக்ஸ்ரே லேப் போன்ற எந்தவித வசதியும் கிடையாது. இதற்கிடையில் கல்லூரியின் தாளாளர் அன்றோ செல்வகுமார் அடிக்கடி மாணவிகளிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து புகார் தெரிவித்தால் பள்ளி அசல் சான்றிதழை தர மாட்டோம் உங்கள் கல்லூரி சான்றிதழும் கிடைக்காது அதையும் மீறி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று கூறி மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.மேலும், தங்களை தனியார் மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுப்பி ஒவ்வொரு மாணவியருக்கும் சுமார் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை ஊதியமாக அவர்கள் பெற்றுக்கொண்டு எங்களது சம்பளத்தை எங்களுக்கு தராமல் மிரட்டி வருவதாகவும்
வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டு எங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தெரிவித்திருந்தனர். மாணவிகள் அளித்த மனு மீதான விசாரணை இன்று பத்மநாபபுரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது ஆனால் பயிற்சி என்ற பெயரில் நாகர்கோயில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இந்த மாணவிகள் விசாரணைக்கு செல்ல மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்தது இதனால் கோபம் கொண்ட மாணவிகள் காவல் துறைக்கு அளித்த தகவலின்படி போலீசார் விரைந்து சென்று மருத்துவமனையில் விசாரணையில் ஈடுபட்டு மாணவிகளை விசாரணைக்கு ஆஜராகிட ஏற்பாடு செய்தனர் கல்லூரி நிர்வாகம் மீது அளித்த புகாரைத் தொடர்ந்து அதிகாரியின் விசாரணைக்கு செல்ல முற்பட்ட மாணவிகளை மருத்துவமனை நிர்வாகம் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *