மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்ட கணவர் மிரட்டல்

Loading

மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்ட கணவர் 100 சவரன் நகையும் 10 லட்சம் ரூபாய் பணமும் தராவிட்டால் அந்த வீடியோவை வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டியிருக்கிறார்.

இதையடுத்து அந்த இளைஞரின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் வேறு ஏதேனும் பெண்களிடம் இப்படி நடந்து கொண்டு மிரட்டி இருக்கிறாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோதா. 28 வயது இந்த இளம்பெண் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டில் இவரது தம்பி நடன பள்ளியில் சேர்ந்து இருக்கிறார். அந்த நடன பள்ளியின் ஆசிரியர் பிரபுவும் வினோதாவ்ன் தம்பியும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பிரபுவுக்கும் வினாதாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் திடீரென்று வினோதாவிடம் பேசிய பிரபு, தனது வளர்ப்புத் தாய்க்கு உடல்நிலை சரியில்லை. அதனால் கும்பிடிப்பூண்டி அருகே உள்ள மதர்பாக்கம் கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு செல்கிறேன். நீயும் என்னுடன் வா என்று சொல்லி காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே சென்றபோது பிஸ்கட், கூல்டிரிங்ஸ் உள்ளிட்ட பொருட்களை கொடுத்திருக்கிறார்.

கூல்டிரிங்ஸ் குடித்ததால் மயக்கமடைந்திருக்கிறார். அதன்பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்ததும், பிரபு மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார் வினோதா. கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் பிரபுவை கைது செய்து விசாரித்து வந்திருக்கிறார்கள். வினோதாவை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொன்னதால், போலீசாரும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

பாலியல் வன்கொடுமை செய்த போது அதை வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார் வினோதா. அந்த செல்போனில் அடிக்கடி காட்டி மிரட்டி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் பிரபுவின் தாய் ரேவதிக்கும் தெரியவர, இருவருக்கும் திருமணம் செய்ய அவர் முன் வந்துள்ளார். ஆனால் திருமணம் செய்ய வேண்டும் என்றால் நகை ,பணம் வரதட்சணையாக தரவேண்டும் என்று வினோதாவிடம் சொல்லியிருக்கிறார்.

ராயபுரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து வைப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதையடுத்து வினோதா 80 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு வழக்கறிஞர் இன்னும் வரவில்லை என்று காத்திருந்து நேரம் ஆனதே தவிர வழக்கறிஞர் யாரும் வரவில்லை . இதனால் எதிரே இருக்கும் கோயிலில் அழைத்துச் சென்று தாலி கட்டாமல் மாலையை மட்டும் மாற்றிக் கொண்டு தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ரேவதி.

வினோதாவிடம் பலமுறை பிரபு தனிமையிலிருந்ததில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கர்ப்பம் அடைந்திருக்கிறார் வினோதா. இதன் பின்னர் தாலி கட்ட வேண்டும் என்று அவர் கேட்க, 100 சவரன் நகையும் 10 லட்சம் ரூபாய் பணமும் தந்தால் தான் திருமணம் நடக்கும் என்று கூறியிருக்கிறார் பிரபு. அதுமட்டுமல்லாமல் நான் கேட்டதை தராவிட்டால் உன்னுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

இதனால் மீண்டும் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார் வினோதா. இந்த புகாரில் பிரபுவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரின் தாயார் ரேவதியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரபு இது போன்று வேறு எந்த பெண்களிடமும் நடந்து கொண்டு ஏமாற்றி இருக்கிறாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.