நிதியுதவியுடன் சிறந்த வழிகாட்டுதல் ஜிதேந்திர சிங்

Loading

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  PIB Chennai இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

Read more

அடிப்படைவசதிபுகாருக்குமத்திய பஞ்சாயத்துராஜ்தீர்வு

Loading

தமிழகத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தீர்வு காணப்பட்டுள்ளது  PIB Chennai தமிழகத்தில் சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்துப் பகுதியில், தெருக்களில் கழிவுநீரைக் கொட்டி அப்பகுதிகளில்

Read more

டிடி தமிழ்அலைவரிசை,தரைவழி 24மணி நேரமும்

Loading

தமிழ்நாட்டில் டிடி தமிழ், ஆகாஷ்வாணி நிகழ்ச்சிகளை பிரபலப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் – தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் விளக்கம்  PIB Chennai டிடி

Read more

பெண்கள்கவனிப்புப்பணி&தொழில்வளர்ச்சிபாதுகாப்பு

Loading

பெண்கள், கவனிப்புப் பணி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தொகுப்பு 2020 ரச்னா மெஹ்ராமனிதவள குழுத் தலைவர், அர்விந்த் நிறுவனம், குஜராத்

Read more

காசி தமிழ் சங்கமம் 4.0 இந்தியாவுக்கு தேவை

Loading

காசி தமிழ் சங்கமம் 4.0 : இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல் எழுதியவர்: திரு. சாமு கிருஷ்ண ஷாஸ்திரி, தலைவர், பாரதீய பாஷா சமிதி இந்தியா தனது பண்பாட்டு எழுச்சியையும், மொழி சார்ந்த

Read more

குழந்தைத்திருமணம்இல்லாதஇந்தியாதேசியதீர்மானம்

Loading

குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்குவது ஒரு தேசிய தீர்மானம் அன்னபூர்ணா தேவி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்   நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு

Read more

அன்புள்ள சக குடிமக்களே, நமஸ்தே!

Loading

அன்புள்ள சக குடிமக்களே, நமஸ்தே! நவம்பர் 26 என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகுந்த பெருமை சேர்க்கும் நாள். 1949 ஆம் ஆண்டு இதே நாளில்தான் அரசியலமைப்புச் சபை

Read more

சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய விருது

Loading

சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய அளவில்  இரண்டு விருதுகள்  கேப்ஜெமினி நிறுவனம் நடத்திய போட்டியில் உயரிய விருது மற்றும் ரூ1.லட்சம் பரிசு தொகை வென்று சோனா கல்லூரி

Read more

 காசி தமிழ் சங்கமம் ஓவியப்போட்டி

Loading

காசி தமிழ் சங்கமம் 4.0 வை முன்னிட்டு ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் 3 மணி நேரம் அர்ப்பணிப்புடன் வண்ணப்படைப்புகளை உருவாக்கினர்   வாரணாசி, நவ. 25- காசி தமிழ் சங்கமம்-4 இன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சுவரொட்டி உருவாக்கும் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இது ஒரு தனித்துவமான கலாசார சங்கமத்தை வழங்கியது. 3 மணி நேரம் நடைபெற்ற போட்டியில், மாணவர்கள் காசி மற்றும் தென்னிந்தியாவின் நாகரிகம், கலை, கலாசாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வண்ணங்களில் தீட்டினர். இந்த நிகழ்வு இரு பகுதிகளுக்கும் இடையிலான கலாசார ஒற்றுமைகளை முன்னிலைப்படுத்தவும், இளைய தலைமுறையினரை இந்த பாரம்பரியத்துடன் இணைக்கவும் நோக்கமாகக் கொண்டது. போட்டியில் தயாரிக்கப்பட்ட அனைத்து சுவரொட்டிகளின் கண்காட்சியும் காசி தமிழ் சங்கமம்-4 இன் முக்கிய இடத்தில் நடைபெறும். போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். போட்டிக்குத் தயாராகும் போது, தென்னிந்திய கோவில்களின் கலை மற்றும் கைவினைகளை இணையத்தில் பார்த்ததாகவும், அவற்றின் அழகு தன்னைக் கவர்ந்ததாகவும் மாணவி அஞ்சனா விளக்கினார். “முந்தைய நாள் இரவு, தென்னிந்திய கோவில்களை ஒரு வலைத்தளத்தில் பார்த்தேன். அங்குள்ள கலை அற்புதம். தென்னிந்தியாவில் இவ்வளவு அழகான மற்றும் அற்புதமான கோவில்கள் இருப்பதை நான் அறிந்தது இதுவே முதல் முறை. காசி மற்றும் தெற்கின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று அவர் கூறினார். அரங்கில் இருந்த இசை பீடத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மெல்லிசைகளால் சூழலை நிரப்பினர். அவர்கள் இந்தி, போஜ்புரி மற்றும் தேசபக்தி பாடல்களையும், தென்னிந்திய பாடல்களையும் பாடினர். தாங்கள் அனைவரும் இடைநிலை மாணவர்கள் என்றும், ஒரு இசைக் குழுவை நடத்துவதாகவும் தெரிவித்தனர். காசி தமிழ் சங்கமம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவர்களுக்கு ஒரு சிறப்பு அனுபவம். ஓவியப்போட்டியில் பங்கேற்ற சித்தார்த், “தலைப்பு கிடைத்ததும், முதலில் இணையத்தில் தென்னிந்திய கோவில்கள் மற்றும் அவற்றின் கலாசாரத்தைத் தேடினேன்” என்று கூறினார். “எங்கள் ஆய்வின் போது, பல அழகான கோவில்களைக் கண்டோம், தென்னிந்தியாவின் நாகரிகத்தைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டோம். தென்னிந்தியாவில் காசியைப்போன்று ஒரு இடம் இருப்பதையும் நாங்கள் கண்டுபிடித்தோம். இதன் அடிப்படையில், காசி மற்றும் தெற்கிலிருந்து வரும் கோவில்களை எனது ஓவியங்களில் சித்தரித்தேன்” என்றார். சுவரொட்டி உருவாக்கும் போட்டி மாணவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றல், கலை மற்றும் கலாசார புரிதலை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கியது. காசி தமிழ் சங்கமம்-4 வடக்கு மற்றும் தென்னிந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை இணைக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி அந்த முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது. 3 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த கலைப்படைப்புகளில், கலைஞர்கள் காசியின் ஆன்மீகத்தையும், தென்னிந்திய கோவில்களின் கட்டிடக்கலை மகத்துவத்தையும் அழகாக இணைத்து, கலாசார ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையின் அழகான செய்தியை வெளிப்படுத்தினர்.

Read more

இந்திய சர்வதேச அறிவியல் விழா2025-சிஎஸ்ஐஆர்

Loading

பத்திரிகை தகவல் அலுவலகம் இந்திய அரசு சென்னை இந்திய சர்வதேச அறிவியல் விழா 2025-க்கான முன்னோட்ட நிகழ்வை சிஎஸ்ஐஆர்- மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியது புதுதில்லி, நவம்பர் 20, 2025  

Read more