கோவையில் ஸ்கின் கேர் மையத்தின் துவக்க விழா
![]()
கோவையில் ஸ்கின் கேர் மையத்தின் துவக்க விழா
கோவை ஆர் எஸ் புரம் கௌலி ப்ரவுன் சாலையில், அதிநவீன வசதிகளுடன் கூடிய “ஸ்க்கின்னிக் மற்றும் ரீக்ரோ” எனும் முடி மற்றும் தோல் சிகிச்சைக்கான சிறப்பு க்ளீனிக் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர். அனுஷ்யா ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இக்கிளீனிக்கை திறந்து வைத்து வாழ்த்தினார். பின்னர், முடி, தோல் சிகிச்சைக்காக அமெரிக்கா மற்றும் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன சிக்கிச்சை இயந்திரங்களை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் கூறியதாவது. “ஸ்க்கின்னிக் மற்றும் ரீக்ரோ” சிறப்பு க்ளீனிக் மருத்துவர்கள், முடி மற்றும் தோல் பிரச்சனைகளுக்காக அதிநவீன இயந்திரங்கள் உதவியுடன் உலகத்தரத்திலான சிகிச்சை அளிக்க இக்கிளினிக் தொடங்கியதாக தெரிவித்தார். இங்கு முடி உதிர்தல் சிகிச்சை, முடி நடுதல், முடி அகற்றுதல், முகச்சுருக்கம் நீக்கி முகப்பொலிவு பெறுதல், மச்சம் மறு ஆணி போன்றவற்றை நீக்குதல், காயத் தழும்பு மற்றும் வெள்ளை படை அறுவை சிகிச்சை, சொரியாசிஸ், படர் தாமரை சிகிச்சை, தொழுநோய் சிகிச்சை என முடி மற்றும் தோல் சம்மந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளுக்கும் தீர்வை தரும் வகையில் சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்தார்.

