கோவையில் கொண்டாட பட உள்ள கோவை விழா

Loading

கோவையில் கொண்டாட பட உள்ள கோவை விழா
கோவையின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் கோவை விழா கொண்டாட பட்டு வருகின்றது இதன் 19-வது பதிப்பாக கோவை விழா, கோவை பந்தயசாலையில் பகுதியில் துவக்கபட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யாபாரதி ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த கோவை விழா நிகழ்ச்சியானது
வரும் 2027ம் ஆண்டு, ஜனவரி 2ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறது இவ்விழாவில், 200-க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. கோவையின் பெருமை, மக்கள், கலை, கலாசாரம், வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய நிகழ்ச்சிகள் உள்பட மொத்தம் 300-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
கடந்த 18 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் கோவை விழா, மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் கொண்டாட்டமாகத் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு விழாவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, அனைத்து தரப்பு மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதுடன், சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், யங் இந்தியன்ஸ் கோவை அமைப்பின் தலைவர் ராகுல் காமத் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, கோவை விழா 2027 தலைவர் நிஷாந்த் சிவசாமி , கடந்த 18 ஆண்டுகளாக விழா கடந்து வந்த பாதை மற்றும் 19-வது ஆண்டின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
0Shares