கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

Loading

65 ஆவது தேசிய மருந்தியல் வார விழா 2026 முன்னிட்டு இந்திய பார்மசி கவுன்சில், மற்றும் இந்திய மருந்தியல் சங்கம் கோவை கிளை இணைந்து நடத்திய மாபெரும் சுகாதார விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த கோவை மாவட்ட துணை ஆட்சியர் பங்கேற்பு
65 ஆவது தேசிய மருந்தியல் வார விழா 2026 முன்னிட்டு, இந்த வாரம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்திய பார்மஸி கவுன்சில், மற்றும் இந்திய மருந்தியல் சங்கம் கோவை கிளை இணைந்து, நடத்திய மாபெரும் சுகாதார விழிப்புணர்வு பேரணி கோவை பந்தய சாலை பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பார்மஸி கல்லூரிகளில் இருந்து, 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட துணை ஆட்சியர்
கலந்துகொண்டு கொடியசைத்து இப்பேரணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோயம்புத்தூர் காலேஜ் ஆப் பார்மஸி பிரின்ஸ்பல் மோகன் கூறியதாவது… தேசிய மருந்தியல் பார்மஸி வார விழா, ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான விழா, நவம்பர் 16ஆம் தேதி முதல், 21 ஆம் தேதி வரை, ” ஆரோக்கியமிக்க இந்தியா, நுண்ணுயிர் எதிர்ப்பு திறனை கட்டுப்படுத்துதல்” என்ற தலைப்பில் விரிவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு கோவை பந்தய சாலையில் இந்திய மருந்தியில் சங்கம் கோவை கிளை, மற்றும் இந்திய பார்மஸி கவுன்சில் இணைந்து மாபெரும் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் பொது மக்களுக்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் என்றழைக்கப்படும், ஆன்டிபயாட்டிக் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்று தெரிவித்தார். இந்த பேரணியில் கோவை பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பார்மசி கல்லூரிகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட மாணவர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் கலந்து கொண்டதாக தெரிவித்தார். இந்த மாபெரும் பேரணியில், இந்திய மருந்தியல் சங்க கோவை பிரிவின் தலைவர் முனைவர் ராமநாதன், பொருளாளர் முனைவர் மோகன், இணைச்செயலாளர் முனைவர் சுந்தர கணபதி, இந்திய பார்மஸி கவுன்சில் அதிகாரிகள், இந்திய மருந்தியல் சங்க கோவை பிரிவின் உறுப்பினர்கள், மற்றும் அனைத்து பார்மஸி கல்லூரிகளின் முதல்வர்களும், கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததாக தெரிவித்தார்
0Shares