கோவையில் மோட்டார் கண்காட்சி துவக்கம்
![]()
கோவை கொடிசியாவில் வாகனங்கள் தொடர்பான ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி துவக்க விழா, ஆறாவது எடிஷனாக நடைபெற்ற கண்காட்சியில் கார்கள், கனரக வாகனங்கள் தொடர்பான அனைத்து தொழில் நுட்பங்களும் ஒரே இடத்தில் காட்சிபடுத்த பட்டது
தி கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன் சார்பாக வாகனங்கள் தொடர்பான கோவை ஆட்டோ ஷோ எனும் கண்காட்சி கோவை கொடிசியாவில் துவங்கியது
ஆறாவது எடிஷனாக நடைபெறும் இந்த கண்காட்சியில் அனைத்து முன்னனி நிறுவனங்களின் இரண்டு சக்கர வாகனங்கள்,
கார்கள், மற்றும் கனரக வாகனங்கள் தொடர்பான அனைத்தும் ஒரே கூரையின் கீழ் காட்சி படுத்தப்பட்டுள்ளன..நவம்பர் 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியின் துவக்க விழா தி கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் மதிபாலன் மற்றும் கோவை ஆட்டோ ஷோ தலைவர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சர்வதேச அளவிலான பாரதீய வித்யா பவன் துணை தலைவரும், குமரகுரு கல்வி குழுமங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக ஜி.ஆர்.ஜி.கல்வி குழுமங்களின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி குத்து விளக்கேற்றினார்…
ஆறாவது எடிஷனாக நடைபெறும் இந்த கண்காட்சியில், இந்தியா மட்டுமின்றி வெளநாடுகளில் இருந்தும் வாகனங்கள் தொடர்பான அனைத்து துறை சார்ந்த பல முன்னனி நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.
இந்த கண்காட்சியில் இந்தியாவில் முன்னணியில் உள்ள அசோக் லைலேண்ட், பென்ஸ், டொயோட்டா, வால்வோ, ஸ்கோடா, ஹூண்டாய், எம். ஜி மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், மகேந்திரா உள்ளிட்ட பல முன்னனி நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.
மேலும் இந்த கண்காட்சியில் பல்வேறு வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள், புதிய மாடல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உயர்தர பேட்டரி மற்றும் ஆயில் தயாரிப்பு நிறுவனங்களும் பங்கேற்று உள்ளன.
நவீன வாகனங்களுக்கான உதிரி பாகங்களும்,வாகன அழகு படுத்துதல் தொடர்பான அரங்குளும் அமைந்துள்ளன..
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள கண்காட்சியில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கபடுவார்கள் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..

