திருவள்ளூரில் மாபெரும் கல்விக் கடன் முகாம்

Loading

திருவள்ளூரில் இரண்டாம் கட்ட “மாபெரும் கல்விக் கடன்” முகாம் : சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர் :
திருவள்ளூர் நவ 07 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பெரும்பாக்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக அரசு மருத்துவக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் (ம) மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய இரண்டாம் கட்ட “மாபெரும் கல்விக் கடன்” முகாமில் மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.அருண்குமார் (திருவள்ளூர்), ஆர்.பிரகாசம் (பூவிருந்தவல்லி) ஆகியோர் முன்னிலையில் 22 மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் ரூ.3.33 கோடி மதிப்பீலான கடன் உதவிக்கான ஆணைகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், திருவள்ளூர் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணைகளை பாராட்டி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதில் இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தென்னரசு,மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் அருள்போஸ், மாவட்ட தடகள பயிற்றுநர் அ.லாவண்யா, திரளான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட,தனியார் வங்கிகளின் பிரதிநிதிகள், பயிற்றுநர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares