தொழிலாளர்களுக்கு அமைச்சர் ம.விஜய் பாலாஜி மிகை ஊதியம் வழங்கினார்

Loading

ஈரோடு மாவட்டம்

மாண்புமிகு கைத்தறி துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர்

திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள்

தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும்
தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகையினை வழங்கினார்.

—–

மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ம. விஜய் பாலாஜி
அவர்கள்  (03.11.2026)அன்று ஈரோடு மாவட்டம், பவானி சாலை, தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல்
பதனிடும் ஆலை வளாகத்தில் ஆலையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு
மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகையினை வழங்கினார்.

மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நெசவாளர்களின் நலனைக் கருத்தில்
கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச்
செயல்படுத்தி வருகின்றார்கள். விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்கள்
ஈடுபட்டுள்ள முக்கியத் தொழிலாக நெசவுத் தொழில் விளங்குகிறது. நெசவாளர்கள் மற்றும்
அவர்களது குடும்பங்களின் நலனுக்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து
மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையானது 1973- ஆம் ஆண்டு
முதல் செயல்பட்டு வருகிறது. இவ்வாலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும்
பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவ்வாலையானது 2024-2025 ஆம் நிதியாண்டில்
ரூ.9.00 கோடியும், 2025-2026 ஆம் நிதியாண்டில் ரூ.4.61 கோடியும் நிகர இலாபம்
ஈட்டியுள்ளதுடன், 2026-2027 ஆம் நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை உத்தேசமாக ரூ.5.62
கோடி நிகர இலாபம் ஈட்டி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

மேலும், தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலைவாய்ப்பு வழங்கும்
வகையில், தமிழ்நாடு அரசின் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வேட்டிகளை சலவை
செய்யும் பணிகள் இவ்வாலைக்கு வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 19 இலட்சம் மீட்டர்
வேட்டிகள் சலவை செய்யும் பணி வழங்கப்பட்டு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று
வருகின்றன. மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் மேற்பார்வையாளர்களைப்
பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாலையில் கூடுதலாக 30
புதிய தொழிலாளர்களை விரைவில் பணியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாலையில் பணிபுரியும் 87 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025-
2026 ஆம் ஆண்டிற்கான 8.33 சதவீத மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை என
மொத்தம் 20 சதவீதம், ரூ.13,36,736/- வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி,

ஒவ்வொருவருக்கும் அவரவர் வருகை நாட்களின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.16,800/- வரை
வழங்கப்படுகிறது என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குனர் / செயலாட்சியர் (தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல்
பதனிடும் ஆலை) திருமதி.சங்கரேஸ்வரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares