இயற்கை வேளாண் விளைப்பொருட்கள் விற்பனை
![]()
கோவையில், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வடவள்ளி உழவர் சந்தையில் இயற்கை வேளாண் விளைப்பொருட்கள் விற்பனை துவக்கம்
தமிழகத்தில் அனைத்து உழவர் சந்தைகளிலும் இயற்கை வேளாண் சந்தையானது வரும் 01.11.2026 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள வடவள்ளி உழவர் சந்தையில், வேளாண்மை துணை இயக்குநர், ஷீலா பூசலட்சுமி தலைமையில், உதவி வேளாண்மை அலுவலர், பிரவீன்குமார் பொறுப்பு அலுவலர் பாக்கியலட்சுமி ஆகியோர், இம்மையத்தை துவக்கி வைத்தனர். மேலும் இயற்கை விளை பொருட்களான செவ்வாழை, கதளி, கத்திரிக்காய் மற்றும் கொத்தமல்லி போன்ற காய்கனி விற்பனை செய்ய வழி வகை செய்துள்ளனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, நுகர்வோர்களுக்கு நஞ்சில்லா காய்கறிகள், மற்றும் பழங்கள் வழங்கும் பொருட்டு, தமிழக அரசு இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு உழவர் சந்தைகளில் கடைகள் ஒதுக்கீடு செய்து இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் சந்தையானது உழவர் சந்தை செயல்படும் அதிகாலை 4.00 முதல்மதியம்12.00வரை செயல்பட உள்ளதால், விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள உழவர் சந்தைகளில் விண்ணப்பித்து, அடையாள அட்டை பெற்றுவிற்பனை செய்து பயன் பெறலாம் என அறிவித்துள்ளனர். மேலும், இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் விதை சான்று மற்றும் வழங்கும் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது

