கோவையில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சி
![]()
கோவையில் ஒரே மேடையில் 36 பேர் எழுதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பெரிதினும் பெரிது கேள் – 2026’ எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கோவையில் நடைபெற்ற ‘பெரிதினும் பெரிது கேள் – 2026’ தொழில்முனைவோர் மாநாட்டில், முதல் முறையாகப் புத்தகம் எழுதிய 36 பேர் தாங்கள் எழுதிய புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்ட நிகழ்வு, லிங்கன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது. 27 வயது இளைஞர்கள் முதல் 56 வயதுடையவர்கள் வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் எழுதிய இந்தப் புத்தகங்களில், தங்களது அனுபவங்களும் பல்வேறு துறை சார்ந்த கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.
ஞான சஞ்சீவனம் குருகுலம் மற்றும் மிஷன் மில்லியனர் கிளப் சார்பில், இரண்டாவது ஆண்டாக ‘பெரிதினும் பெரிது கேள் – 2026’ மாநாடு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. இதில் சுமார் 1,200 தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக இது தொடர்பாக ஞான சஞ்சீவனம் குருகுலம் மற்றும் மிஷன் மில்லியனர் கிளப் நிறுவன தலைவர் சசி குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோராக இளைஞர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கில் இம்மாநாடு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்..
தொழில்துறையில் வெற்றி பெற்றவர்கள் தங்களது அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள், வளர்ச்சிக்கான வழிமுறைகள் குறித்து மாநாட்டில் பகிர்ந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்…
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, இதுவரை புத்தகம் எழுதாத 36 முதன் முறை எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய 36 புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்டனர். இதில் 27 வயது முதல் 56 வயது வரையிலான பல்வேறு வயதினரும், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தங்களது சிந்தனைகளையும் அனுபவங்களையும் புத்தகங்களாகப் பதிவு செய்திருந்தனர்.
ஒரே நேரத்தில் 36 எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட்ட இந்த நிகழ்வு லிங்கன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது இம்மாநாட்டின் சிறப்பம்சமாக அமைந்தது.
விழாவில் ஸ்கை குழும நிறுவனர் ஸ்கை வி. சுந்தர்ராஜ், கோவை ரூட்ஸ் குழும மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் டாக்டர் கவிதாசன், தைரோகேர் நிறுவனர் டாக்டர் வேலுமணி, சாணக்கியா தொலைக்காட்சி நிறுவனர் ரங்கராஜ் பாண்டே, முன்னாள் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஏ. கலியமூர்த்தி, ஆரோக்கியா ஹெல்த் கேர் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. சிவராமன் உள்ளிட்ட தொழில்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் பங்கேற்றனர்.

