கோவையில் கார் மேளா
![]()
கனவு கார்களைக் குறைந்த விலையில் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” ; கோவையில் ‘ஸ்ரீ வைஷ்ணவி கார்ஸ்’ சார்பில் பிரம்மாண்ட பிரீமியர் கார் மேளா இன்று தொடக்கம்!
ரூ.7 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்கள் காட்சிப்படுத்தல்: 25-க்கும் மேற்பட்ட வங்கிகள் மூலம் உடனடி மாதத் தவணை வசதியுடன் அக்டோபர் 28 வரை மெகா விற்பனை!
கோவை மாநகரில், இதுவரை இல்லாத வகையில் அதிநவீன சொகுசு மற்றும் பிரீமியர் கார்களை ஒரே இடத்தில் வாங்கிடும் வகையில், ‘ஸ்ரீ வைஷ்ணவி கார்ஸ்’ (Sri Vaishnavi Cars) சார்பில் பிரம்மாண்டமான பிரீமியர் கார் மேளா (Premier Car Mela) இன்று (அக்டோபர் 21) தொடங்கி எதிர்வரும் அக்டோபர் 28-ஆம் தேதி வரை கோவையில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டு உள்ளது.
நமது சாலையில் செல்லும் போது பிஎம்டபிள்யூ (BMW), ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) போன்ற சொகுசு கார்களைப் பார்த்து விட்டு, “நாமும் இதுபோன்று ஒரு காரை வாங்க வேண்டும்” என்று ஏங்காத வாகனப் பிரியர்களே இருக்க முடியாது.
அனைவரின் அந்த நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையில், தமிழகத்தில் கோவையில் முதல் முறையாக இந்தச் பிரத்தியேக பிரீமியர் கார் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த மேளாவின் சிறப்பம்சங்கள் குறித்து ஏற்பாட்டாளர்கள் கூறும்போது:
சாதாரண நாட்களில் எங்களது அலுவலகத்தில் பல்வேறு கார்கள் இருந்தாலும், இந்த ஒரு வாரம் முழுவதும் பிரத்தியேகமாக லக்ஸரி செக்மென்ட் (Luxury Segment) கார்களுக்கு மட்டுமே இந்த மேளா நடத்தப்படுகிறது. ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ, ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், ஜாகுவார், மினி கூப்பர் உள்ளிட்ட பல்வேறு உலகத் தரம் வாய்ந்த பிராண்டுகளின் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் பலரும் சொகுசு கார்கள் என்றாலே பல கோடிகள் ஆகும் என்று நினைக்கின்றனர். ஆனால், எங்களது மேளாவில் வெறும் ரூ.7 லட்சம் முதல் ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்பு உள்ள கார்கள் வரை அனைத்து வகையான மாடல்களும் (Sedan, SUV வகைகளில்) வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப இடம் பெற்று உள்ளன.
குறைந்த விலையில் தரமான கார்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
கார் வாங்க விரும்புவோருக்குத் தடையற்ற நிதி உதவி வழங்க ஏதுவாக, தேசிய மற்றும் தனியார் வங்கிகள், உள்ளூர் நிதி நிறுவனங்கள் என 25 வகையான நிதி நிறுவனங்களின் (Banks & Finance) கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
குறைந்த முன் பணம் செலுத்தினாலும், உடனடியாக லோன் அப்ரூவல் பெற்று மாதத் தவணை முறையில் காரை எளிதில் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ள பழைய வாகனங்களை மாற்றி விட்டு, தங்களுக்குப் பிடித்த புதிய பிரீமியர் காரைத் தடையின்றித் தேர்வு செய்யும் எக்ஸ்சேஞ்ச் வசதியும் உடனடி மதிப்பீட்டுடன் செய்து தரப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கார் வாங்குவதுடன் தங்களது பழைய கார்களை விற்பனை செய்ய நினைப்பவர்களும் இங்கு கொண்டு வந்து உடனடியாக விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இந்த மெகா கார் விற்பனை மேளா ஸ்ரீ வைஷ்ணவி கார்ஸ், 100 அடி சாலை, டாடாபத் 3-வது வீதி, காந்திபுரத்தில் இருந்து 1 கி.மீ தொலைவு, கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி
வருகிற அக்டோபர் 28-ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு இந்த மெகா விற்பனை மேளா நடைபெற உள்ளது.
எனவே, உங்களது கனவு காரைக் குறைந்த விலையிலும், எளிதான தவணை முறையிலும் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பும் வாகனப் பிரியர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நேரில் வந்து பார்வையிட்டுப் பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

