கோட்டை ஸ்ரீ பத்ரகாளியம்மன்கோவில் நவராத்திரி விழா
![]()
ஈரோடு கோட்டை ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் நவராத்திரி விழாவில் ₹12.50 லட்சம் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம்: திரளான பக்தர்கள் பரவசம்
ஈரோடு கோட்டை சின்னபாவடியில் அமைந்துள்ள செங்குந்தர் சமூகத்தார் கோட்டை ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் 27-ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த புரட்டாசி மாதம் 24-ஆம் நாள் (11.10.2026) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஐப்பசி மாதம் 3-ஆம் நாள் (20.10.2026) செவ்வாய்க்கிழமை வரை 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. உலக அமைதிக்காகவும், நாடு செழிக்கவும், பொதுமக்கள் அனைத்து நலன்களையும் பெறவும் தினசரி மாலை 6.00 மணிக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், விழாவின் முக்கிய நாளான இன்று 15-ஆம் தேதி அம்மனுக்குத் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, சுமார் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாலான பிரம்மாண்ட அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது; கண்கொள்ளாக் காட்சியாகப் பண நோட்டுகளால் ஜொலித்த தனலட்சுமி அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மனைப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று மிகுந்த பிரம்மிப்புடன் கண்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து தினம்தோறும் வழங்கப்படும் அன்னதானத்தில் சிறப்பாக பால் சாதம் (குஸ்கா) மற்றும் கல்கண்டு சாதம் மற்றும் குருமா போன்ற அன்னதானத்தை சுமார் 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்றுக் கொண்டனர்.

