கோவையில் யூஸ்டு கார் மேளா
![]()
கோவை பட்டணம் பகுதியில், ஆயுதபூஜை, நவராத்திரி, மற்றும் தீபாவளியை முன்னிட்டு கார்ஸ் 327 நிறுவனத்தின் சார்மாக, 2வது மாபேரும் யூஸ்ட் கார் சேல் மேளா!!! வரும் 9 ம் தேதி முதல், 18ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.!
கோவையில் கார்ஸ் 327 சார்பாக நடைபெற்று நிறைவுபெற்ற முதல் யூஸ்ட் கார் சேல் மேளா, மாபேரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, வருகின்ற
நவராத்திரி, ஆயுதபூஜை, மற்றும் தீபாவளியை முன்னிட்டு கோவை கார்ஸ் 327 சார்பாக, வரும் 9 ம் தேதி முதல், 18ம் தேதி வரை, 10 நாட்களுக்கு கோவை நீலாம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள கார்ஸ் 327 நிறுவன வளாகத்தில், இரண்டாவது மாபெரும் யூஸ்டு கார் சேல் மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்ஸ் 327 நிறுவன உரிமையாளர் விஷ்ணு வேணுகோபால் கூறியதாவது… கடந்த முறை நடத்த பட்ட, யூஸ்டு கார்ஸ் மேளாவில் 130 கார்கள் விற்பனை செய்துள்ளோம். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த கார்கள் கிடைக்காததால், பல வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நவராத்திரி ஆயுதபூஜை, தீபாவளிக்கான, கார்ஸ் மேளா நடத்த பட திட்டமிட்டுள்ளோம். இந்த யூஸ்டு கார் மேளாவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கார்களை கண்காட்சியில் காட்சி படுத்த பட உள்ளதாகவும், இதில் குறைந்த பட்சமாக 1லட்சம் முதல் கார்கள் வாடிக்கையாளர்களுக்காக விற்பனைக்கு உள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் கார்களை எடுத்து செல்ல கார் மெக்கானிக், கார் துறைகளை சார்ந்தவர்கள் அழைத்து அவர்களின் மூலமாக ஆய்வு செய்து கார்களை எடுத்து செல்லுங்கள் என்றார். வாடிக்கையாளர்கள் முழு திருப்தி அடைந்தால் மட்டுமே அவர்களுக்கு கார்களை விற்பனை செய்வதாகவும், நிறுவனத்தின் மூலதனமே நம்பிக்கை அதனை காப்பாற்ற நமது நிறுவனம் எப்பொழுதும் வாடிக்கையாளர்களுடன் துனை நிற்க்கும் என்றார்.

