கோவையில் குதிரையேற்ற போட்டி

Loading

கோவையில் தேசிய அளவிலான மிகபெரிய அளவில் நடத்தபடும் குதிரையேற்ற லீக் போட்டிகள்! இந்தியாவின் முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்க உள்ளனர்!!!
ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெற உள்ளது!!!
இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இன்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து, இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் எனும் இந்தியாவின் மிகபெரிய குதிரை தடை தாண்டும் போட்டிகளை கோவையில் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர். இப்போட்டியின் இரண்டாம் சீசனுக்கான அறிமுக நிகழ்ச்சி கோவை கொடிசியா அருகே உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. அப்பொழுது ஈக்வெஸ்ட்ரியன் லீக் ஆலோசகரும், எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறிமுகம் செய்தார். விழாவில் ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா பெடரேசன் தலைவர் சக்தி பாலாஜி, நிகழ்ச்சி குறித்து எடுத்து கூறினார். இதில் சென்னை புல்ஸ் அணியை சேர்ந்த பாரத் மனோகரன், பெங்களூர் நைட்ஸ் சனியைச் சேர்ந்த திலீப், கொல்கொண்டா சார்ஜர்ஸ் அணியைச் சேர்ந்த நவீன், பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் அணியை சேர்ந்த கிருஷ்ணா, மற்றும் எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ் அணியை சேர்ந்த பாலமுருகன், ஆகியோர் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் கோவையில் நடைபெற உள்ள இந்த போட்டிகள், வெள்ளைனைபட்டியை அடுத்த மோளப்பாளையம் பகுதியில் பிசைட் தி பவர் ஹவுஸ் எனும் தனியார் மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சக்தி பாலாஜி கூறியதாவது..
முன்னணி குதிரையேற்ற வீரர்கள் தங்களது திறமைகளை ஷோ ஜம்பிங் போட்டிகளில் வெளிப்படுத்துவதற்கான தொழில்முறை தளத்தை உருவாக்குவதுடன், இந்தியாவில் குதிரையேற்ற விளையாட்டு போட்டிகளில் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் நடத்த படுகின்றது என்று தெரிவித்தார். இந்த ஆண்டு 6 மாநிலங்கில் இருந்து வீரர்கள் களமிறங்க உள்ளதாகவும், புதுடில்லியை சேர்ந்த சர்வதேச குதிரையேற்ற கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நடுவர் முன்னிலையில், 110 சென்டிமீட்டர், 120 சென்டிமீட்டர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற உள்ளது இதில் மொத்தமாக 30 லட்சம் பரிசுகள் வழங்க பட உள்ளது என தெரிவித்தார்.
0Shares