கோவையில் புதிய கவரிங் நகை கடை திறப்பு
![]()
24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளுக்கான இந்தியாவின் முதல் பிரீமியம் ப்ராண்டாக திகளும் மந்தாரா கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் அழகிய பிரம்மாண்ட நகைகளுக்கான புதிய கிளையை திறந்துள்ளது .
நகை தயாரிப்பில் 26 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தை கொண்டுள்ள, மந்தாரா நிறுவனம், பைன் கோல்ட் வெர்மெயில் எனும் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளுக்கான புதிய கிளை, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் துவங்கபட்டது இதனை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன் திறந்து வைத்தார். திறப்புவிழாவை தொடர்ந்து இது குறித்து மந்தாரா நிறுவனத்தின் உரிமையாளர் பினுகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
கோவை விமான நிலையத்தில் ஏற்கனவே எங்களுக்கு ஒரு கிளை உள்ளது. எங்களின் இரண்டாவது கிளையாக இந்த கிளை, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் இன்று திறக்க பட்டுள்ளது என்றார்.
நகை தயாரிப்பில் சுமார் 26 ஆண்டுகள் தனக்கு அனுபவம் உள்ளது, மந்தாரா நகைகள் திறமையான கைவினைகலைஞர்களின், தயாரிப்பில் உருவாக்க பட்ட 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட, அழகிய நெக்லஸ்கள், வளையல்கள், மோதிரங்கள், கம்மல்கள், ஜிமிக்கிகள், பிரேஸ்லெட்கள், திருமண நகைகள், பேஷன் நகைகள், உள்ளிட்ட கலெக்ஷன்கள் தயாரிக்க பட்டு விற்பனை செய்ய படுகின்றது. மேலும் உங்களது பூஜை அறையில் வைப்பதற்கான தெய்வங்களின் சிலைகள் தத்ரூபமாக தங்க முலாம் பூசப்பட்டு வடிவமைக்க பட்டுள்ளது என்றார். தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை உயர்வால் பலதரப்பட்ட பெண்களும், கவரிங் நகைகளுக்கு விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், கவரிங் நகைகளை அணிவதால், அலர்ஜி, அரிப்பு, மற்றும் கருத்து போதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் நிலை இருந்து வருகின்றது. இவற்றை கருத்தில் கொண்டு இந்த வகை நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது கருக்காது, தோலில் அறிப்பை ஏற்படுத்தாது, நீடித்த தரத்தை வழங்கும் கவரிங் நகைகளாக அமைந்துள்ளது இதனால் இது பெண்களின் வரப்பிரசாதமாக இந்த வகை நகைகள் அமையும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மந்தாரா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ருதி பினு குமார் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

