ஈரோட்டில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
![]()
ஈரோட்டில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
ஈரோடு ஆகஸ்ட் – 18
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சிறுக்கலஞ்சி ஊராட்சி ஸ்ரீ சக்தி நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர், சாக்கடை, சாலை மற்றும் குப்பைத் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, ஸ்ரீ சக்தி நகர் பொதுமக்கள் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், ஸ்ரீ சக்தி நகர் பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இப்பகுதியில் சீரான குடிநீர் வசதி, சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய், வீதி சாலை மற்றும் குப்பைத் தொட்டி வசதிகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பொதுமக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

