பொய்யான புகாரால் மூடிய ஆயில் ஆலையை திறக்கக் கோரிமனு

Loading

பொய்யான புகாரால் மூடிய ஆயில் ஆலையை திறக்கக் கோரி ஈரோட்டில் தொழிலாளர்கள் மனு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மூலக்கரையில் இயங்கி வரும் மிஸ்டர் கோல்ட் ஆயில் நிறுவனத்தின் மீது சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுத்துவதாகக் கூறி மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நடவடிக்கை எடுத்து ஆலையை மூடியுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு கோரிக்கை மனு அளித்தனர். ஆலையில் பூஜ்ஜிய கழிவு சுழற்சி முறை பின்பற்றப்படுவதாகவும், நிலத்தை அதிக விலைக்கு விற்கும் நோக்கில் சிலர் அளித்த பொய்யான புகாரால் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சுற்றியுள்ள விளைநிலங்களும் கால்நடைகளும் ஆரோக்கியமாக இருக்கும் சூழலில், மாவட்ட ஆட்சியர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு தவறான புகார்களை நிராகரிக்க வேண்டும் என்றும், ஆலையை மீண்டும் இயக்க அனுமதித்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
0Shares