கைம்பெண்கள்,ஆதரவற்ற பெண்கள்,பேரிளம் பெண்கள் நல வாரியசிறப்பு முகாம்
![]()
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர சிறப்பு முகாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தகவல் :
திருவள்ளூர் ஆக 07 : திருவள்ளூர் மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரின் நலனுக்காக தமிழ்நாடு அரசு, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மூலம் மாவட்ட அளவில், நிதியினை முறையாக கையாளுதல், சொத்துரிமை, குடும்ப வன்முறையிலிருந்து உரிய பாதுகாப்பு, இலவச சட்ட உதவி, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் இணைந்து பயன்பெறலாம். எனவே, இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேர விருப்பம் உள்ளவர்கள் www. tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் (அ) கைபேசி வாயிலாக பதிவு செய்யலாம்.
மேலும், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாமல் உள்ள பேரிளம் பெண்கள், ஆகியோர் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் தங்களின் விவரங்களை பதிவுச் செய்ய 19.08.2026 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு தாங்கள் உறுப்பினராக சேர்ந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.

