திருத்தணி முருகன் கோயிலில் விழாக்கோலம்

Loading

ஆடி மாத முதல் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் விழாக்கோலம் : காவடிகளுடன் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் :  

திருவள்ளூர் ஆக 07 : ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி ஆடி கிருத்திகையையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் அதிகாலை முதல் மலைக் கோவிலில் குவிந்து வருகின்றனர்.  இதனால் மலைக்கோயில் தேர் வீதியில் காவடிகளுடன் பக்தர்கள் கூட்டம் விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பொது வழியில் சுமார் 5 மணி நேரமும், ரூபாய் 100 சிறப்பு கட்டண வழியில் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி மாத முதல் கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் சுவாமிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. மேலும் காவடி மண்டபத்தில் வள்ளி- தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருவதால் காவடி சுமந்து வந்த பக்தர்கள் காவடி மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தி வருகின்றனர்.
ஆடி மாதம் முதல் கிருத்திகையில் ஏராளமானோர் காவடி சுமந்து வருவதால் மலைக்கோவில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . ஆடி மாதம் முதல் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்  மலைப்பாதை வழியாக மலைக்கோயிலில் குவிந்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சாமி தரிசனம் செய்ய முன்னாள் இந்து சமய அறநிலை துறை அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான பி.கே சேகர்பாபு  தனது குடும்பத்துடன் இன்றும் சாமி தரிசனய் செய்ய வருகை தந்தார். அப்போது மலைக்கோவில் அடிவாரத்தில் அவரது  இரண்டு சொகுசு கார்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  இதனால் போலீஸ் அதிகாரிகளுக்கும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து அவரை வரவேற்க வந்த திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் காவல்துறை அதிகாரிகளிடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர் முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார் . அவரது காரை விடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர் அப்பொழுது இவரது கார் மேலே வருவதற்கு அனுமதி இல்லை. அதற்கான சிறப்பு அனுமதி என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆகையால் அவரது காரை மேலே அனுமதிக்க முடியாது. மலைக்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று போலீசார் தெரிவித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் அதிகாரிகளுக்கும் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கும் 30 நிமிடத்திற்கு மேலாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதனைத் தொடர்ந்து திருக்கோயில் அதிகாரி தெரிவித்த பிறகு முன்னாள் இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கார் மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார். அப்போது எனது காரை மேலே விடவில்லை என்று தெரிவித்துவிட்டு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சென்றது திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 ஏராளமான வாகனங்களில் கோயிலுக்கு வருவதால் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் மலை அடிவாரத்தில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு திருக்கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட  பேருந்துகளில் மற்றும் நடந்தும் மலை கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்த
0Shares