ஈரோட்டில் சொத்து தகராறில்பாதுகாப்பு கோரி முதியவர் மனு
![]()
ஈரோட்டில் சொத்து தகராறில் விவாகரத்து பெற்ற மனைவி தாக்குதல்: பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முதியவர் மனு
ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர், தனது முன்னாள் மனைவி மற்றும் அவருடைய ஆட்களிடமிருந்து உயிருக்கு பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குணசேகரன் தெரிவிக்கையில், தனக்கும் தனது மனைவிக்கும் விவாகரத்தாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது அவர் தனது வீட்டின் மீது உரிமை கொண்டாடி பிரச்சனை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது மனைவியான தவமணி மற்றும் அவருடன் வந்த தனசேகரன் என்பவரும் இணைந்து, தன்னையும் தனது வயதான தாயாரையும் தாக்கி கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ள குணசேகரன், இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் ( மலையம்பாளையம் காவல் நிலையம்) புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். அச்சத்தின் காரணமாக தற்போது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், சொத்து தகராறில் தங்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
விவாகரத்து பெற்ற மனைவி தாக்குதல்: பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முதியவர் மனு