கோவையில் நடைபெற்ற திருக்கோவில் திருவிழா

Loading

கோவை வடவள்ளி அடுத்த நவாவூர் பிரிவு, ஆலமரத்தோட்டம் பகுதியில், அருள்மிகு வீரமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 
சேரகுல வேளாளர் பிள்ளை சமூக குலதெய்வ திருக்கோவிலான, இத்திருக்கோவிலின், 14ம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் நவாவூர் பிரிவு, ஆலமரத்தோட்டம் பகுதியில், அருள்மிகு வீரமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
சேரகுல வேளாளர் பிள்ளை சமூக குலதெய்வ திருக்கோவிலான, இத்திருக்கோவிலின், 14ம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 4ம் தேதி கணபதி பூஜை, மற்றும் திருக்காப்பு கட்டுதலுடன் துவங்கபட்ட இத்திருவிழா, 5ம் தேதியன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ச்சியாக மேலதாளங்களுடன் முளைப்பாரி ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை வேலையில், கோவை கல்வீரம் பாளையம் சித்தி விநாயகர் திருக்கோவில் பகுதியில் இருந்து, சக்தி கரகம் மற்றும் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் பொழுது மேல தாளம் முழங்க, வான வேடிக்கையுடன், பட்டாசுகள் வெடித்து அம்மனை அழைத்து வந்து நவாவூர் பிரிவில் ஆலமரத் தோட்டம் உள்ள, வீரமாட்சியம்மன் திருக்கோவிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்க பட்டது. வீரமாட்சியம்மன் ஆலமரத்தோட்டம் விழா குழுவினர்
சேரகுல வேளாலர் சங்க வடவள்ளி கிளை தலைவர் லோகநாதன், செயளாலர் ஜோதி மணி, பொருளாளர் வெங்கிடு சாமி, சேர குல வேளாளர் மாநில இளைஞரணி அமைப்பாளர் பிரபு ரவிச்சந்திரன், கோவில் கமிட்டி லேலுமணி, திருநாவுக்கரசு , சரவணன்,பாபு , சிவக்குமார் , அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் பேரவை நிறுவனர் சிவதேசிங்கம்,
தமிழ்நாடு சேரகுல வேளாளர் மாநில தலைவர் பொண்ராஜ் பிள்ளை, முன்னார் தலைவர் வெள்ளியங்கிரி பிள்ளை, உள்ளிட்ட உறவினர்கள் இளைஞர்கள் நண்பர்கள் மற்றும் பக்தர்கள் பலர்கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
0Shares