கோவையில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
![]()
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..
கோவை சரவணம்பட்டி பகுதியில் குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா ‘ஸ்வாகதம் 2026’ எனும் தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீ சங்கர் வாணவராயர் கூறியதாவது..
சமூக வலைத்தளங்களில் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே நேரத்தை வீணாக்குவதை மாணவர்கள் கைவிட வேண்டும்; தங்கள் எதிர்காலத்தை தாங்களே செதுக்கத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பள்ளிக்கும் கல்லூரிக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய அவர், “இனி மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை மட்டுமே பின்பற்றுபவர்கள் அல்ல, அவர்கள் தங்களின் சொந்த பயணத்தின் எஜமானர்கள்” என்று கூறினார்.
மாணவர்கள் தங்களுக்குப் விருப்பமான பல்வேறு துறைகளை இணைந்து படிக்க வேண்டும் என்று ஊக்குவித்த அவர், பொருளியல் மாணவர்கள் அறிவியல் துறையையும், மொழிப்பாட மாணவர்கள் பொதுக் கொள்கைகளையும் கற்கத் தயங்கக் கூடாது என்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர்களிடம், தங்கள் பிள்ளைகளை கண்காணிப்பவர்களாக மட்டுமல்லாமல், அவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் உறுதுணையாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.முன்னதாக, கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி. தீபேஷ்வர் வரவேற்புரையாற்றினார். 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி, குறுகிய காலத்தில் அடைந்த தேசிய அளவிலான வளர்ச்சிகளை அவர் பட்டியலிட்டார்.
புதிய மாணவர்களின் பன்முகத்தன்மை குறித்து பேசிய அவர், “இந்த பேட்ச்சில் 60 சதவீதம் பேர் மாணவிகள். இந்தியாவின் 9 மாநிலங்கள் மற்றும் 5 வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் 16 வெவ்வேறு தாய்மொழிகளைப் பேசுபவர்கள். திறமையான மாணவர்களின் கல்விக்கு பொருளாதார சூழ்நிலை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, இந்த ஆண்டு சுமார் 70 மாணவர்களுக்கு என்எம் ஸ்டெப் மற்றும் விளையாட்டுத் துறைக்கான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
நிறைவாக, கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் கே.எஸ். நாராயணன் நன்றியுரை கூறி விழாவை நிறைவு செய்தார்.

