கோவையில் நடைபெற்ற ஸ்டார்ட்அப் போட்டிகள்
![]()
கோவையில், ஜி.ஆர்.ஜி ஜென் நெஸ்ட் இன் லஞ்ச்பேடு பிட்ச் போட்டிகள், நிறைவு பெற்றது, இதில், ஏழு ஏ.ஐ மற்றும் அக்ரி டெக் தொடக்க நிறுவனங்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
கோவையைச் சேர்ந்த ஜி.ஆர்.ஜி ஜென் நெஸ்ட் இன்குபேட்டர் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு, மற்றும் அக்ரி டெக் துறைகளில் வருவாயை ஈட்டும் தொடக்க நிறுவனங்களுக்கான, தனது முதல் பிட்ச் போட்டிகளை லஞ்ச் பேட் எனும் தலைப்பில் நடத்தியது. இதில் கலந்துகொண்டு குழுத்திறன், தனித்திறன் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றம் பரிசுகள் வழங்கப்பட்டது.
கோவை கொடிசியா அருகே உள்ள ஜிஆர்டி ஜென் நெஸ்ட் மையத்தில், நடைபெற்ற இந்த போட்டிகளில், கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்து, பல்வேறு நிறுவனர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், வெஞ்சர் கேபலிஸ்ட்கள், மற்றும் உயர் நிகர தனிநபர்கள் ஒன்று கூடி நேரடி, பிட்ச்களையும், முதலீட்டாளர் ஆலோசனை களையும் எதிர்கொண்டனர். இந்த போட்டிக்கு இந்தியா முழுவதும் இருந்து 70 தொடக்க நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தது, இதில் 16 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, முதலீட்டாளர் குழு நேரடியாக பிட்ச் செய்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனரும், 7 நிமிட தங்களது சம்மிட்டை, வழங்கியதுடன், மூன்று நிமிட கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த பண பரிசு, தொகைக்காகவும் தொடர் முதலீடு மற்றும், ஜிஆர்டி ஜென் நெஸ்டின் மெய்நிகர் இன்குபேஷன் திட்டத்திற்கான விஐபி பரிசீலணைக்காகவும் இதில் பெற்றனர். பெறப்பட்ட 70 விண்ணப்பங்களிலிருந்து, வருவாய் வளர்ச்சி, சந்தை வாய்ப்பு, குழுவலிமை மற்றும் அளவீட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, ஏஐ மற்றும் அக்ரி டெக் ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்து, 16 நிறுவனங்கள் நேரடியாக அழைக்க பட்டது
இதில், சிறந்த ஸ்டார்ட் அப் களை வழங்க, நாடு முழுவதிலும் இருந்து கோவைக்கு வருகை புரிந்து தங்களது சமர்ப்பிப்புகளை தெளிவு படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக அதிகாரி அருண் நாயர், மேனேஜிங் பார்ட்னர் விமல் குமார், நேட்டிவ் ஏஞ்சல் நெட்வொர்க் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீராம் சங்கரன், மற்றும் ஜி.ஆர்.ஜி ஜென் நெஸ்ட் தலைமை நிர்வாகி அதிகாரி ஹேதல் சோன்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

