திருவள்ளூர்ஆய்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவி

Loading

திருவள்ளூரில் நடைபெற்ற அனைத்து அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் குமார்.ரா வழங்கினார் :
திருவள்ளூர் ஜூலை 26 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் அனைத்து அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார்.ரா தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநருமான கே.பி.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் ச.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அமைச்சர் குமார்.ரா கூறியதாவது :
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுதல், நிர்வாக அனுமதி வழங்கி நிதி ஒப்புதல் வழங்குதல் மற்றும் விடுப்பு செய்தல். இதை எவ்வாறு செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு தேவையானதை அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களுடன் விளக்கமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், பட்டா, குடும்ப அட்டை ஆகியவை மக்களுக்கு சரியாக வழங்கப்பட வேண்டும். எவ்வித முறைகேடும் இல்லாமல் வழங்க வேண்டும். இதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. ஏதாவது தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் இருக்கக்கூடிய கழிவறைகள், டாஸ்மாக் மதுகடைகள் அமைந்துள்ள பகுதிகளில் கவனத்துடன் கையாள வேண்டுமெனவும், பெண்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் குமார்.ரா கூறினார்.
.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால், சக்கர நாற்காலி, காதொலி கருவி மற்றும் கருவி உபகரணங்கள் ரூ.1.60 இலட்சம் மதிப்பீட்டில் உபகரணங்களையும்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.10,414 மதிப்பீட்டிலும், சமூகநலம்-மகளிர் உரிமைத்துறை சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் 269 பயனாளிகளுக்கு ரூ.14.14 இலட்சம் மதிப்பீட்டிலும் தையல் இயந்திரங்களையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 85 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 கோடி மகளிர் சுய உதவி கடன் உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.அருண்குமார் (திருவள்ளூர்), பிரகாசம் (பூவிருந்தவல்லி), திரு.எஸ்.விஜயகுமார் (கும்மிடிபூண்டி),ரமேஷ்குமார் (ஆவடி), எம்.எஸ்.ரவி; (பொன்னேரி), எம்.எல்.விஜயபிரபு (மாதவரம்), மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரணித்,மாவட்ட வருவாய் அலுவலர் கே.வி.ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான கே.இந்துபாலா, பொன்னேரி சார் ஆட்சியர் ப.அப்துல்ராசிக், ஆணையர் ஆவடி மாநகராட்சி ரா.சரண்யா,ஆவடி காவல் இணை ஆணையர் ஆர்.சிவகுமார் மற்றும் பல்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares