Skip to content
Tuesday, July 21, 2026
Latest:
  • ஈரோட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்றஆட்சியரிடம் மனு
  • ஈரோடு கூட்டுறவுவங்கி ஊழியர்கள்13அம்ச கோரிக்கை
  • இரா.தமிழின்பன் கண்ணில் கருப்புத் துணி கட்டி மனு
  • இன்றைய ராசிபலன் – 21-07-2026
  • இன்றைய ராசிபலன் – 20-07-2026
செய்திஅலசல் l Seidhialasal

செய்திஅலசல் l Seidhialasal

Tamil Online NewsPaper

Visitors: 0

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
  • புதுச்சேரி
  • மருத்துவம்
  • கிரைம்
  • ஜோ‌திட‌ம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • e-Papers
    • Today e-Paper
    • Other e-Papers
    • English
ஈரோட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்றஆட்சியரிடம் மனு
மாவட்டம் 

ஈரோட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்றஆட்சியரிடம் மனு

21 July 202621 July 2026 Seidhi Alasal Petition submitted to the Collector to remove TASMAC shops in Erode.

Loading

ஈரோட்டில் பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் மற்றும் கோவில்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றக் கோரியும், மாவட்டம் முழுவதும் இது குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தியும் தன்னார்வலர் ராயல் K.சரவணன் மற்றும் ‘We The Leaders’ அமைப்பினர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், பெருந்துறை ஒன்றியம், ஈங்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்: 3900 ஆனது பள்ளி வளாகத்தில் இருந்து சுமார் 375 மீட்டர் தொலைவிலும், அம்மாபேட்டை ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சி, சந்தப்பேட்டை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை எண்: 3952 ஆனது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவிலும் இயங்கி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய கடைகளால் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களையும் பாதுகாப்பு அச்சத்தையும் எதிர்கொண்டு வருவதால், அப்பகுதி பொதுமக்கள் கையொப்பமிட்டு அளித்த மனுக்களை இணைத்து, இந்த இரு கடைகளின் நிலையையும் விதிமுறைகளின்படி ஆய்வு செய்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, அவை அனைத்தும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் கோவில்களில் இருந்து குறைந்தபட்சம் 500 மீட்டர் தொலைவிற்கு அப்பாற்பட்டு மட்டுமே செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை உடனடியாக இடமாற்றம் செய்யவோ அல்லது முற்றிலும் அகற்றவோ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது உடன் பிரகாஷ், சின்னத்துரை, கார்த்திக், விவேக், நாராயணசாமி, தேவராஜ், பாலமுருகன் உட்பட பலர் இருந்தனர்.
0Shares
  • ← ஈரோடு கூட்டுறவுவங்கி ஊழியர்கள்13அம்ச கோரிக்கை

You May Also Like

குதிரையேற்ற போட்டியில் இளம் வீரர்கள் சாதனை

குதிரையேற்ற போட்டியில் இளம் வீரர்கள் சாதனை

30 December 202530 December 2025 Seidhi Alasal

கடலூர் மாவட்டம் மனுநீதிநாள்

24 November 202224 November 2022 Seidhi Alasal 0

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌அலுவலகத்தில் பேரிடர்‌ மேலாண்மை 2021 தொடர்பான ஆலோசனை கூட்டம்‌…

10 January 2021 Seidhi Alasal 0

Ads

இந்தியா

Good news for Indians living in the USA.. The postal parcel service has started again!
இந்தியா உலகம் 

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..மீண்டும் தொடங்கியது தபால் பார்சல் சேவை!

15 October 202515 October 2025 Seidhi Alasal

Loading

இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக

Former Canadian Prime Minister enjoys boating with wife..? Viral scenes!
உலகம் 

முன்னாள் கனடா பிரதமர் பாப் பாடகியுடன் படகில் உல்லாசம்..? வைரலான காட்சிகள்!

13 October 202513 October 2025 Seidhi Alasal
Diesel subsidy cancellation: Intensifying protest against the chief!
அரசியல் உலகம் 

டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

7 October 20257 October 2025 Seidhi Alasal
Eiffel Tower closure.. Tourists disappointed!
அரசியல் உலகம் 

ஈபிள் கோபுரம் மூடல்..சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

4 October 20254 October 2025 Seidhi Alasal
A peace agreement is established.. Hamas is subservient to America!
உலகம் கிரைம் 

அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. அமெரிக்காவுக்கு அடிபணிந்தது ஹமாஸ்!

4 October 20254 October 2025 Seidhi Alasal
Copyright © 2026 செய்திஅலசல் l Seidhialasal. All rights reserved.
Theme: Seidhi Alasal by Seidhi Alasal.