கோவையில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு

Loading

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், புற்றுநோய் விழிப்புணர்வு “ஸ்பின் வீல்” க்யூ ஆர், குறியீட்டை அறிமுகப்படுத்திய மாநகர காவல் ஆணையர் கண்ணன்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதுமையான “புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்பின் வீல்” க்யூ ஆர், குறியீட்டை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்,
ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் குகன் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், கூறியதாவது.. இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு தகவல்களை எளிதில் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புதிய விழிப்புணர்வு முயற்சியாக இந்த “ஸ்பின் வீல்” வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த முயற்சியின் மூலம் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் பாதிப்புகள் உள்ளிட்ட தீவிர நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு எளிமையாக எடுத்துரைக்க முடியும் என்றார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் மற்றும் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
0Shares