சிறந்த பணியாளர்களுக்கான விருது வழங்கும் விழா
![]()
கோவில்பட்டியில்
சிறந்த பணியாளர்களுக்கான விருது வழங்கும் விழா
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகையை முன்னிட்டு விருதுகள் வழங்கும் விழா சௌபாக்கியா மஹாலில் நடந்தது.
ஒவ்வொரு வருடமும் அனைத்து ரோட்டரி சங்கங்களையும் மாவட்ட ஆளுநர் ஆய்வு செய்து ரோட்டரி சங்கங்கள் சிறப்பாக செயல்பட ஆலோசனை வழங்குவதற்கு மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகை நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதில்
கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் பதிவேடுகள் மற்றும் அறிக்கைகள், சங்க செயல்பாடுகளை மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு ஆய்வு செய்து சுகாதாரத்துறை,மருத்துவத்துறை, போக்குவரத்து காவல்துறை,போக்குவரத்து கழகம்,மின்சார வாரியம்,உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.
கோவில்பட்டி
ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோட்டரி சங்க செயல்பாடுகளை ஆய்வு செய்து சிறந்த பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார்.
இதில் ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன்,பாபு,முத்துச்செல்வன் ,ஆசியா பார்ம்ஸ் பாபு, நாராயணசாமி உள்பட முன்னாள் தலைவர்கள்,உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார் நன்றி கூறினார்.

