ஏசி போடசொல்லியும் போடாததால் பெண்தற்கொலை
![]()
வெயிலின் தாக்கத்தால் இரவில் புழுக்கம் காரணமாக தூங்க முடியாததால் ஏசி போட சொல்லி கேட்டு செய்யாததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை :
திருவள்ளூர் ஏப் 27 : திருவள்ளூர் அடுத்த பூண்டி ஜெயராம் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ்(26) புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோனிகா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்து சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. பூண்டியில் அரசு பள்ளியில் படிக்கும் போது காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் குழந்தைகள் இல்லை. ஆகாஷ் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ குமரன் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். மோனிகா வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் தற்போது வெயில் காரணமாக இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டிற்கு ஏ.சி. ன வாங்கி தருமாறு மோனிகா கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் நேற்று இரவு ஆகாஷ் மற்றும் அவரது தம்பி அவினாஷ், அப்பா மற்றும் அம்மா ஆகிய நான்கு பேரும் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கச் சென்றுள்ளனர். காலையில் ஆகாஷ் எழுந்து வந்து பார்த்த போது படுக்கை அறையில் தனியாக இருந்த மனைவி மோனிகா புடவையால் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து பிரேதத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

