மாவட்டதேர்தல்அலுவலர்மு.பிரதாப்ஆகியோர்நேரில்ஆய்வு
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு அறையில் வைத்து சீல் செய்யும் பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், செவ்வாய்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரியில் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 வாக்குப்பதிவு நிறைவடைந்தது, வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளர் தேவேந்திர சிங் குஷ்வாஹா,(கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி),தேர்தல் பொதுப் பார்வையாளர் முகமது அக்பர் வாணி (திருத்தணி மற்றும் திருவள்ளூர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 344 வாக்குச்சாவடிகள், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 327 வாக்குச்சாவடிகள், திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 337 வாக்குச்சாவடிகள் மற்றும் திருவள்ளுர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 335 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு அறையில் வைத்து சீல் செய்யும் பணிகள் நடைபெற்றது.
பெருமாள்பட்டு தனியார் கல்வி நிறுவன பள்ளி வளாகம் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளர் வன்லால் மாவ்யா (ஆவடி மற்றும் பூவிருந்தவல்லி), தேர்தல் பொதுப் பார்வையாளர் ராக்கி பிஷ்வாஸ் (மதுரவாயல் மற்றும் அம்பத்தூர்), தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரபல் சேப்ஃபா (மாதவரம் மற்றும் திருவொற்றியூர்) மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 502 வாக்குச்சாவடிகள், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 484 வாக்குச்சாவடிகள், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 344 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு அறையில் வைத்து சீல் செய்யும் பணிகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, பெருமாள்பட்டு தனியார் கல்வி நிறுவன தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளர் வன்லால் மாவ்யா (ஆவடி மற்றும் பூவிருந்தவல்லி), தேர்தல் பொதுப் பார்வையாளர் ராக்கி பிஷ்வாஸ் (மதுரவாயல் மற்றும் அம்பத்தூர்), தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரபல் சேப்ஃபா (மாதவரம் மற்றும் திருவொற்றியூர்) மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 452 வாக்குச்சாவடிகள், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 365 வாக்குச்சாவடிகள், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 526 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு அறையில் வைத்து சீல் செய்யும் பணிகள் நடைப்பெற்றது.
இவ் ஆய்வுகளில் துணை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான ச.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், உதவி இயக்குநர் (நில அளவை) பேச்சியப்பன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பி.தேவன், பொன்னேரி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் பொன்னேரி வட்டாட்சியருமான சோமசுந்தரம், ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி துணை ஆணையருமான மாரிசெல்வி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆவடி வட்டாட்சியருமான கண்ணன், பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் உதவி ஆணையருமான (கலால்) கணேஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலருமான உதயம், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் உதவி ஆணையர் (ம) மண்டல அலுவலருமான செந்தில்குமரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

