துவக்கப்பள்ளியின்24வது ஆண்டு விழா

Loading

கோவை
கோவை கவுண்டம்பாளையம்
இந்திரா நகர் பகுதியில் உள்ள நியூகிரெஸன்ட் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியின்24வது ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுட்டி குழந்தைகளின் நடனம் அனைவரையும் கவர்ந்தது..
கோவை கவுண்டம்பாளையம்
இந்திரா நகர் பகுதியில் உள்ள நியூகிரெஸன்ட் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியின்24வது ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
பள்ளியின் தலைவர் ஜனாப் ஐ. சுக்ருல்லா பாபு தலைமை தாங்கினார்.
பள்ளியின் தாளாளர் ஜி.டி. ஜாபர்அலி முன்னிலை வகித்தார் . விழாவில்,
சிறப்பு அழைப்பாளராக
மஸ்ஜித்தே நூர் பள்ளிவாசலின் செயலாளர் ஏ. தாஜ்முகம்மது,
பொருளாளர் அப்துல் ரவூப் மற்றும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
முன்னதாக யூகேஜி மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் சுக்ருல்லாபாபு பட்டங்களை வழங்கி மாணவர்களை பெருமை படுத்தினார்.
பள்ளியின் தாளாளர் ஜாபர் அலி,
பள்ளியின் முதல்வர் ராணிமார்கரெட்,
துணை முதல்வர் ரஜியா பேகம் ஆகியோர் பட்டங்களை பெறும் மாணவ மாணவியர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
சுட்டி குழந்தைகளின் நடன நிகழ்ச்சி, யோகா நிகழ்ச்சி, தனித்திறமை வெளிபடுத்தும் பேச்சு போட்டி, கதை, கவிதை, கட்டுரை, பாடல்கள் பாடுதல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் சுட்டி குழந்தைகள் தங்களது திறமைகளை வெளி படுத்தி அசத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர் இதில், மாணவ மாணவியர்கள், பள்ளி குழந்தைகள், குழந்தைகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares