ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் அன்னதானம்
![]()
ஈரோடு
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 16-வது மாதமாக 2000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
ஈரோடு தாளவாடி தலைமலை தொட்டபுரம் ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து, கடந்த இரண்டு வருடமாக தங்களது சேவையைத் தொடர்ந்துள்ளனர். ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 16-வது மாதமாகச் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. ஆஞ்சநேயர் படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்ற பின்பு அன்னதானம் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு முன்னிலை ஞானசேகரன் சிறப்பு அழைப்பாளர்கள் முருகன் டெக்ஸ் உரிமையாளர் சண்முகசுந்தரம், வைஷ்ணவி டெக்ஸ் உரிமையாளர் கோபால் மற்றும் கோவில் அறங்காவலர்கள் அன்னதான கமிட்டியின் நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்துகொண்டு 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள், முதியோர்களுக்கு உணவை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சார்பாக ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியிலும் சுமார் 700 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக தாளவாடியில் அமைந்துள்ள மனநல காப்பகத்தில் 250 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

