இருசக்கரவாகனத்தினமீது ஜேசிபி இயந்திரம்மோதி விபத்து

Loading

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஜேசிபி இயந்திரம் மோதி விபத்து ஒருவர் பலி :
திருவள்ளூர் ஏப் 18 : திருவள்ளூர் அடுத்த நெடும்பரம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேசய்யா என்பவரது மகன் ஹேமாத்திரி கடமனேனி (52). இவர் திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் இன்று காலை தனது கடையிலிருந்து புறப்பட்டு நெடும்பரம் பனப்பாக்கம் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கைவண்டூர் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த ஜேசிபி எந்திரம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0Shares