வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் நேரில் ஆய்வு :

திருவள்ளூர் ஏப் 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு  கும்மிடிப்பூண்டி -15, , பொன்னேரி -13, திருத்தணி -13, திருவள்ளூர் -14, பூந்தமல்லி -11, ஆவடி -20, அம்பத்தூர் -23, மதுரவாயல்-21, மாதவரம் -15, திருவொற்றியூர் -15 என மொத்தம் 160 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் அம்பத்தூர், மதுரவாயல் மற்றும் ஆவடி தொகுதிகளில் 20 முதல் 23 வேட்பாளர்களும், மற்றும் 7 தொகுதிகளில் 11 முதல் 15 பேர் வரையில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள், நோட்டாவுக்கும் சேர்த்து 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். 16 க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலுடன் சேர்த்து அந்தந்த பகுதியில் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகம்,ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டாபிராம் டிஆர்பிசிசிசி இந்து கல்லூரியிலும், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்திலும், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொரட்டூர் தனியார் கல்லூரியிலும், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னேரி டாக்டர். எம்.ஜி.ஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும்,  திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் அரசு உதவி பெறும் பள்ளியிலும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட   கும்மிடிப்பூண்டி  தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் காந்தி பிரதான சாலையில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில்  வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல் திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதிக்கான சென்டானிஸ் மேல்நிலைப்பள்ளி வளாக பாதுகாப்பு அறையில் வாக்குபதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் இயந்திரங்களில் வேட்பாளர்கள் சின்னங்கள், பெயர்கள் பொருத்தும் பணிகளை  தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 335 வாக்குச்சாவடிகளுக்கு 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தலா 13, 14 குழுக்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அந்த வகையில் கூடுதல் சேர்த்து 402 வாக்கு பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வி.வி.பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன என தெரிவித்தனர்.
இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் உதவி ஆணையருமான(கலால் ) கணேசன், ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் துணை ஆணையருமான(ஆவடி மாநகராட்சி) மாரிச்செல்வி,உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆவடி வட்டாட்சியருமான கண்ணன், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியருமான  சதீஷ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும்  மாவட்ட வருவாய் அலுவலருமான ச.சுரேஷ், மாதவரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் வட சென்னை வருவாய் கோட்டாட்சியருமான  பெருமாள்,மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares