9ம்தேதியிலிருந்து 29 தேதி வரைதேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை
![]()
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வரும் 9 ம் தேதி காலை 7 மணி முதல் 29 ம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்து கணிப்புகள் பத்திரிகைகளில் வெளியிட தடை : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஏப் 31 : தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 15.03.2026 அன்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 126 A-ன் படி 09.04.2026 வியாழக்கிழமை காலை 7:00 மணி முதல் 29.04.2026 புதன் கிழமை மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்து கணிப்புகள் பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலமாகவோ, மின்னணு ஊடகங்கள் மூலமாகலோ அல்லது வேறு ஏதேனும் வழிகளிலோ பொது தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்தால் தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்ற விவரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

