23தேதிவாக்குப்பதிவுநடைபெறஉள்ளதால்அரசுவிடுமுறை

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 23 ம் தேதி  வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஏப் 31 : தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தல் வரும் 23.04.2026 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 23 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அனைத்து வாக்களர்களும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டியுள்ளதால் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், IT, BPO உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மேற்படியான விடுப்பு நாளுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படக்கூடாது என சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிபந்தனைகள் மீறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares