கோவையில் ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
![]()
கோவை
கோவையில் நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேவிகேட்டிங் ஆட்டிசம் டூகெதர்
எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரபல சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா, அமித் பார்கவ் ஆகியோர் பங்கேற்றனர்
ஆட்டிசம் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நேவிகேட்டிங் ஆட்டிசம் டூகெதர் என்ற சிறப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள ஐ.எம்.ஏ. அரங்கில் நடைபெற்றது.
தேர்ட் ஐ ஆட்டிசம் மையம் மற்றும் கோ ப்ளூ ஆகியோர் இணைந்து நடத்திய இதில், தேர்ட் ஐ ஆட்டிசம் மையம் நிறுவனர் சரண்யா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஜி. பக்தவத்சலம் மற்றும் டாக்டர் அனுஷா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசுகையில்,, ஆட்டிசம் குறைபாட்டை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது மற்றும் உள்ளடக்கிய கல்வி வழங்குவதின் அவசியத்தை வலியுறுத்தினர்.
நிகழ்ச்சியில், சின்னத்திரை பிரபலங்களான அர்ச்சனா சந்தோக் மற்றும் அமித் பார்கவ் கலந்து கொண்டு, சமூகத்தில் கருணை மற்றும் விழிப்புணர்வை வளர்க்க வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
அர்ச்சனா சந்தோக் தலைமையில் நடைபெற்ற நிபுணர் குழு கலந்துரையாடலில், ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு, ஆரம்ப கட்ட சிகிச்சை மற்றும் ஆதரவு அமைப்புகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
மேலும், ஆட்டிச மைய மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன…
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி அமர்வு நடத்தப்பட்டு, ஆட்டிசத்தின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறியும் முறைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற உள்ளடக்கிய சூழலை உருவாக்குவது குறித்து நடைமுறை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

