இந்தியதேர்தல்ஆணையத்தால்தேர்தல்விதிஅமல்
![]()
இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியதை தொடர்ந்து, பறக்கும் படை மற்றும் நிலை குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணிகள் : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் மார்ச் 16 : இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியதை தொடர்ந்து பறக்கும் படை மற்றும் நிலை குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து நகராட்சிகளின் ஆணையர்கள் மற்றும் உள்ளாட்சிகளின் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்
மாலை 6 மணி முதல் பறக்கும் படை மற்றும் நிலைகுழுக்கள் இந்த இரண்டு படைகளும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்கள் சோதனையை தொடங்கி இருக்கிறார்கள் முக்கியமாக இந்த பட்டறைபெருமந்தூர் இன்று திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் (ம) திருவள்ளூர் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் இன்று சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள பறக்கும் படைகள் அவர்களுக்கான பணிகளை தொடங்கி உள்ளார்கள். அதன் ஒரு படை பட்டறைபெருமந்தூர் சுங்கச்சாவடி அருகில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதனை பார்வையிட்டோம் மேலும் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு படைகள் 8 மணி நேரத்திற்கு ஒரு குழுப்படை என்ற விகிதம் ஒரு நாட்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று சுழற்சிகளில் இப்படைகள் உள்ள அலுவலர்கள் வந்து தொடங்கப்பட்டுவ்ள்ளது. அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு இடங்கள்ல இருக்கிற அரசு விளம்பரங்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் , அது தொடர்பாக இருக்கிற புகைப்படங்கள் இது எல்லாத்தையுமே அகற்றும் பணிகள்ல ஈடுபட்டுட்டு இருக்கிறோம்.
மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறார்கள். எந்த இடங்களில் பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் எவ்வித முன்அனுமதி இல்லாமல் இனி கூட்டங்களோ பொது இடங்களில் கொடிக்கம்புகள் நடுதல் பொது இடங்களில் மற்ற விளம்பரங்கள் இது எதையுமே வந்து தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் உள்ள அலுவலகத்தில் அனுமதி வாங்காமல் செய்யக்கூடாது அப்படின்னு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் எடுத்து சென்றால் அதற்கு உரிய ரசீதை அவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு உங்கள் வாயிலாக கொடுக்கிறோம் ஏன்னா அதுக்கு மேல எடுத்துட்டு போறதுக்கு தேர்தல் ஆணையம் வந்து அனுமதிக்கிறது இல்ல அதுக்கு மேல எடுத்துட்டு போலாம் எடுத்துட்டு போனால் உரிய ஆவணம், அதன் மூலதனம் என்ன அப்படிங்கற விபரம் கரியாக சொல்லணும் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இன்றி தேர்தல் நடத்தை விதிகள் வந்து சிறப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுவதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்வார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் கூறினார்.
முன்னதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியதை தொடர்ந்து, அதனை கடைப்பிடிப்பது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் 10 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டீ. ஸ்ரீராம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், துணை ஆட்சியர் (பயிற்சி) சண்முக ப்ரீத்தா, அலுவலக மேலாளர் (நீதியியல்) செல்வம், வட்டாட்சியர் சிவகுமார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.ரவிச்சந்திரன், திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

