ராமகிருஷ்ணாபல்மருத்துவகல்லூரிபட்டமளிப்புவிழா

Loading

கோவை
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 21வது பட்டமளிப்பு விழா கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது..
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 21வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டமளிப்பு அணிவகுப்புடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்  டாக்டர் .ஆர். சுந்தர், மணிப்பால் பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் கோபாலகிருஷ்ணன். ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். ஸ்ரீஹரி மற்றும் கல்லூரியின்  அனைத்து துறைத் தலைவர்களும் அரங்கினுள்  மதிப்புடன் அழைத்து வரப்பட்டனர். அணிவகுப்புக்குப் பின், நிகழ்ச்சி இறை வணக்கப் பாடலுடன் இனிதே ஆரம்பமானது. பின்னர் எஸ்.என்.ஆர்.  அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர். ஆர். சுந்தர் அவர்கள் பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார். முதல்வர் டாக்டர் ஜா.ஸ்ரீஹரி அவர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்று, பட்டம்  பெறும் மாணவர்கள் தங்களின் கல்வி அறிவை வளர்ச்சிக்கான அடிப்படையாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிர்வாக அறங்காவலர் டாக்டர். ஆர். சுந்தர் மாணவ மாணவியர்கள் மத்தியில் கூறியதாவது.. பட்டபடிப்பின் முக்கிய நோக்கமே  சமுதாயத்திற்கு சேவை செய்வதுதான்   என்றார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான டாக்டர் கோபாலகிருஷ்ணன் பட்டமளிப்பு தின உரையை வழங்கி, மாணவர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலும் அளித்தார்.
தொடர்ந்து 80 இளநிலை பட்டதாரிகளும், 12 முதுநிலை பட்டதாரிகளும் தங்களுடைய பட்டங்களைப்  பெற்றனர். எல்லாத் துறைகளிலும் முதன்மை பெற்ற மாணவர்கள்  பதக்கங்களோடு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். டாக்டர் சிந்தூரா மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்றதுடன் சிறந்த மாணவிக்கான தங்க பதக்கத்தையும் பெற்றார். மேலும்  இரண்டு அறக்கட்டளை நிதியும் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் துணை முதல்வர் அவர்கள் பட்டம் பெறும் மாணவர்களை மருத்துவ உறுதிமொழி ஏற்க வைத்தார். அதன் பின்னர் பட்டமளிப்பு விழா நிறைவடைந்ததாக நிர்வாக அறங்காவலர் அறிவித்தார். நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.
0Shares