திருவள்ளூர்முக்கியவீதிகள்வழியாககொடிஅணிவகுப்பு
![]()
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் உத்தரபிரதேசத்திலிருந்
திருவள்ளூர் மார்ச் 13 : தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மாவட்டங்களிலும் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதோடு அந்தந்த பகுதிகளில் கொடி அணிவகுப்பும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் ஆகியோர் பணிக்கு தேர்வு செய்து தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உத்திரபிரதேசத்திலிருந் து வருகை தந்த துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் 80 பேர் இரவு வருகை தந்தனர். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் நோக்கத்தில் துணை ராணுவப்படை வீரர்கள் திருவள்ளூரில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். இந்த அணிவகுப்பு காமரஜார் சிலை தொடங்கி, ராஜாஜி சாலை, வடக்கு ராஜவீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று செங்குன்றம் சாலையில் நிறைவடைந்தது.

