பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மு.பிரதாப் ஆய்வு

Loading

காக்களுர் கலவல கண்ணன் செட்டி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு :

திருவள்ளூர் மார்ச் 12 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், காக்களுர் கலவல கண்ணன் செட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு இன்று முதல் தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை 149 மையங்களில் மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். மொத்தமாக இதில் 15742 மாணவர்களும் 15741 மாணவிகளும் என மொத்தம் 31483 மாணவ மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். அதோடு சேர்த்து 1461 மாணவ மாணவிகள் தனி தேர்வர்களாக பல்வேறு மையங்களில் இந்த தேர்வுகளை எழுதி வருகின்றனர். எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமாக 32944 நபர்கள் தேர்வுகளை எழுதுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பலனாக 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் இந்த வருடம் கடந்த 10-15 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிக குறைவான வருகை புரியாத நபர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இந்த வருடம் தான் மிக மிக குறைவாக இருக்கிறது. அதே மாதிரி இன்றும் பத்தாம் வகுப்பு தேர்விலும் இது வருவதற்கான வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் இந்த மையத்தில் மொத்தம் 250 மாணவ மாணவிகள் எழுத பதிவு பெற்றிருந்தார்கள். அதில் அனைவரும் வருகை புரிந்துள்ளனர்.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் என்னென்ன தேவை எப்படி அவர்களை படிக்க வைப்பது அதே போன்று ஒவ்வொரு ஆசிரியரையும் தயார் செய்து அவர்கள் அனைத்தையும் படிக்க வைத்தார்கள். இந்த வருடம் நல்ல முடிவுகள் திருவள்ளூர் மாவட்டம் வகிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) கோ.சுப்பராவ்,ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
0Shares