முதலமைச்சர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள்
![]()
ஈரோடு
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 2வது மண்டல அலுவலக வளாகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு 2வது மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ ) சுப்பிரமணியம் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண் பரிசோதனை ரத்த பரிசோதனை, பிரஷர், சர்க்கரை, தைராய்டு, சளி, காய்ச்சல் மற்றும் பொதுநல மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் 3 மருத்துவர்கள், 12 செவிலியர்கள் பணியாற்றினர். இந்த முகாமில் 200க்கும் மேற்பட்டவர்கள் தூய்மை பணியாளர்கள் இலவச பரிசோதனை பெற்று பயன் அடைந்தனர். இந்த முகாமில் திமுக.அப்பாசாமி. தீன தயாளன். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்..

